பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி 4 ஆண்டுகளாக ரூ.1 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி சாதனை


பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி 4 ஆண்டுகளாக ரூ.1 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி சாதனை
x

பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி 4 ஆண்டுகளாக ரூ.1 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக வங்கி தலைவர் கூறினார்.

காஞ்சிபுரம்

பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி அன்னை இந்திரா காந்தி சாலையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியானது இந்தியாவில் 1904-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் கூட்டுறவு நகர வங்கி ஆகும். காஞ்சீபுரத்தில் தலைமை அலுவலகம் மற்றும் 5 கிளைகள் மூலம் காஞ்சீபுரம் நகர மக்களுக்கு 119 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து ரூ.1 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வருகிறது. டெபாசிட் தொகை 2017-2018-ம் ஆண்டு ரூ.134 கோடியில் இருந்து, 2021-2022-ம் ஆண்டு ரூ.163 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் தொகை 2017-2018-ம் ஆண்டு ரூ.65 கோடியில் இருந்து 2021-2022-ம் ஆண்டு ரூ.109 கோடியாக உயர்ந்துள்ளது. டெபாசிட்தாரர்களுக்கு டெபாசிட்டில் ரூ.5 லட்சம் வரை காப்புறுதி செய்யப்படுகிறது. உறுப்பினர்களுக்கு 11 சதவீதம் வரை பங்கு ஈவுத்தொகை வழங்கப்படுகிறது.

நடப்பு 2022-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக தேர்வு பெற்று 19.11.2022 அன்று கோவையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரால் பாராட்டு கேடயம் வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதற்கு காரணமாக இருந்த வங்கி உறுப்பினர்களுக்கும், டெபாசிட்தாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் வங்கி பொது மேலாளர் ஸ்ரீராமன் உடன் இருந்தார்.


Next Story