பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம்


பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
x

வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருச்சி

வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மாசி பெருந்திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் கன்னிமாரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரியகாண்டியம்மன் கோவில் பெரிய தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

முன்னதாக வீரப்பூர் ஜமீன்தார்களும், கன்னிமாரம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்களுமான மீனா ராமகிருஷ்ணன், தரனீஷ், ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன், அசோக் ஆகியோர் தலைமையில் பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள், கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகள் பெரியபூசாரி செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், சின்ன பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை, கோவில் பரம்பரை அர்ச்சகர் ரெங்கசாமி அய்யர் ஆகியோர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தேரோட்டம்

அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரியகாண்டியம்மன் தேருக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்்து சாம்புவன் காளை முரசு கொட்டி முன் செல்ல திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களையும், மலர்களையும் தேரோடும் வீதியின் இருபுறமும் நின்று தேர் மீது போட்டு வணங்கினர். தேர் கோவிலை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. இன்று (புதன்கிழமை) மாலை சத்தாவர்ணம் என்னும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story