நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும்
சீர்காழியில் நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சீர்காழி;
சீர்காழியில் மயிலாடுதுறை வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் தாமு இனியவன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் அறிவழகன், மண்டல துணை செயலாளர்கள் பாதரக்குடி காமராஜ், நாகை சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா வரவேற்று பேசினார். கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மூர்த்தி கதிர்வளவன், தேர்தல் பணி குழு மாநில செயலாளர் செல்வ அரசு ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி(வியாழக்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, திருமாவளவன் மணி விழாவை மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைவர் தலைமையில் நடத்துவது, சீர்காழியில் நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட அரசை கேட்பது, வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்துவது, திருவாலி, பெருந்தோட்டம் ஏரிகளை முழுமையாக தூர்வ அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகிகள் பொறியாளர் பால்ராஜ் ரத்தினம், ரியாஸ்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.