மோகனூர் வட்டாரத்தில் 4 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி


மோகனூர் வட்டாரத்தில் 4 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி
x
நாமக்கல்

மோகனூர்

மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் ஜெயமாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாய நிலங்களில் மண்வளம் மற்றும் பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆண்டுதோறும் மழைக்காலங்களுக்கு முன், நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண்ணை, விவசாய பயன்பாட்டிற்காக வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மோகனூர் வட்டாரத்தில் அரூர், ஆண்டாபுரம், என்.புதுப்பட்டி ஊராட்சி கோவிந்தன் பிள்ளைஏரி, எஸ்.வாழவந்தி என 4 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் செய்பவரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் இருக்கும் கிராமமும், வண்டல் மண் எடுத்து செல்ல வேண்டிய ஏரி அமைந்துள்ள கிராமமும், அதே கிராமமாகவோ அல்லது அதற்கு அருகில் உள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள்ளோ அமைந்திருக்க வேண்டும். விவசாய நிலமானது, நஞ்செய் நிலமாக இருந்தால் 25 டிராக்டர் லோடும், புஞ்செய் நிலமாக இருந்தால் 30 டிராக்டர் லோடும், விவசாய நிலத்தின் விஸ்தீரணம் பொறுத்து அனுமதி வழங்கப்படும். நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் வி.ஏ.ஓ. சான்றுகளை இணைத்து, மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story