நெல்லையில் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும்-அரசியல் கட்சியினர் மனு


நெல்லையில் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும்-அரசியல் கட்சியினர் மனு
x

நெல்லையில் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

ஆதித்தமிழர் கட்சி ராமமூர்த்தி, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், திராவிட தமிழர் கட்சி சங்கர், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன், தமிழ்ப்புலிகள் கட்சி தமிழரசு, தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முத்து வீரன் உள்ளிட்டோர் நேற்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு சென்றனர். அவர்கள் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணி மண்டபத்தில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. அந்த பகுதியில் தலைவர்களை வரவேற்று பேனர்கள் வைக்க கூடாது, கொடிகள் கட்டக்கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று கடுமையான நெருக்கடிகளை மாநகர போலீசார் செய்து வருகின்றனர். ஆனால் நெல்லைக்கு வருகை தரும் பிற கட்சி தலைவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து, பேனர் அமைக்க அனுமதி வழங்குவது ஏற்புடையது அல்ல. எனவே ஒண்டிவீரன் நினைவு தினத்துக்கு மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பேனர்கள் வைப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story