கோவை குற்றாலத்துக்கு செல்ல இன்று முதல் அனுமதி


கோவை குற்றாலத்துக்கு செல்ல இன்று முதல்  அனுமதி
x
தினத்தந்தி 8 Aug 2023 4:00 AM IST (Updated: 8 Aug 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை குற்றாலத்துக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

சாடிவயல்

கோவை மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிக ளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். கேரளாவில் பெய்து வரும் மழையால் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த மாதம் தொடக்கத்தில் கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடந்த மாதம் 5-ந் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே பொது மக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து கடந்த மாதம் 18-ந் தேதி கோவை குற்றாலம் திறக்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள் பலத்த மழை பெய்ததால் குற்றாலம் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் மூடப்படும் என்று வனத்துறை அறிவித்தது.இந்த நிலையில் தற்போது கோவை குற்றாலம் உள்ள பகுதியில் மழை இல்லை. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்து நீர்வரத்து வழக்கம்போல் உள்ளது. எனவே கோவை குற்றால அருவிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.


Next Story