மாணவர்களை ஏற்றிச் செல்லும்ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு 'பெர்மிட்' வழங்க வேண்டும்


மாணவர்களை ஏற்றிச் செல்லும்ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க வேண்டும்
x
நாமக்கல்

ராசிபுரம்

ஆல் இந்தியா ரோடு சேப்டி அண்டு சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் மற்றும் கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனங்களின் தலைவருமான சிதம்பரம் தமிழக அரசின் போக்குவரத்து துறை செயலருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் அமைப்பானது பஸ், கார், லாரி, இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் மாணவர்களுக்கும் சாலை விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை

ஏற்படுத்தும் பணியை செய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களை அவரவர் வீடுகளில் இருந்து ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் மாணவர்களை அழைத்துச் சென்று கல்லூரியில் விடுகின்றனர். அதேபோல் மாலை நேரங்களிலும் பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். இதில் ஷேர் ஆட்டோ, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் பள்ளி கல்லூரிகளின் வாழ்வாதாரமும் இருந்து வருகிறது. எனவே மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவிற்கு உரிய பர்மிட் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story