மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் முதல்-அமைச்சரால் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வழங்கப்பட உள்ளது.
இதில் சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர், பொதுக்கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 22 விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கு என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகிற 25-ந் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.