பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அரசால் கோரப்படும் சான்றுகளை நாளை மறுநாளுக்குள் வழங்கிட வேண்டும்


பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அரசால் கோரப்படும் சான்றுகளை நாளை மறுநாளுக்குள் வழங்கிட வேண்டும்
x

பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அரசால் கோரப்படும் சான்றுகளை நாளை மறுநாளுக்குள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் நடுக்குவாதம் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்றுடன், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இந்த அலுவலகத்தில் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதுநாள் வரை மேற்கண்ட சான்றுகள் வழங்காத மாற்றுத்திறனாளி நபர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) வழங்கிட வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட சான்றுகளை வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்க இயலாது என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.


Next Story