பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் புறப்பாடு


பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் புறப்பாடு
x

பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் புறப்பாடு நடந்தது.

திருச்சி

சமயபுரம்:

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 26-ந்தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் திருமஞ்சனம் மற்றும் முத்தங்கி சேவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, கண்ணாடி அறை சேவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story