பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
x
திருப்பூர்


சேவூர் அருகே தாளக்கரை எனும் புனித திருத்தலத்தில் குடிகொண்டுள்ளார். நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு இக்கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு திருமஞ்சனம், பால், தயிர் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு பாராயணம் நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் சேவூர் அருகே பிரசித்தி பெற்றதும் மேலதிருப்பதி என போற்றப்படுவதுமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. மேலதிருப்பதி, ஊஞ்சல்வனம், சீனிவாசபுரம் என்றெல்லாம் போற்றப்படும் இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு திருமஞ்சன அபிஷேகமும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 7 மணிக்கு, கருட வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.


Next Story