பெருமாள் வீதி உலா


பெருமாள் வீதி உலா
x

பெருமாள் வீதி உலா நடந்தது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பழமலைநாதபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமலைநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத விழா நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வாகனத்தில் பெருமாளை எழுந்தருள செய்து வீதி உலா நடைபெற்றது. இதில் பெருமாளை கிராம மக்கள் வழிபட்டனர்.


Next Story