பூச்சி மருந்து வினியோகஸ்தர் டிப்பர் லாரி மோதி பலி


பூச்சி மருந்து வினியோகஸ்தர் டிப்பர் லாரி மோதி பலி
x

குன்னம் அருகே பூச்சி மருந்து வினியோகஸ்தர் டிப்பர் லாரி மோதி பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் தனியார் பூச்சி மருந்து கம்பெனியில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட வினியோகஸ்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று விடியற்காலை அகரம் கிராமத்தில் இருந்து அரியலூர் சென்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் தனது கிராமத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மேலமாத்தூர் கிராமத்தில் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பீதியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story