பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து


பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து
x
சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:-

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி கிருத்திகா நீட் தேர்வில் 569 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவர் மற்றும் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவிகள் டி.தரணி, ஆர்.தரணி, பிரபா, கார்த்திகா மற்றும் பல் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு பெற்ற ஜெகதீஸ்வரி ஆகிய 6 பேர் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது எடப்பாடி பழனிசாமி மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, ஜெய்சங்கரன், நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story