குலதெய்வ வழிபாடுக்கு அனுமதிக்க கலெக்டரிடம் மனு


குலதெய்வ வழிபாடுக்கு அனுமதிக்க கலெக்டரிடம் மனு
x

ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் தீவு பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு குலதெய்வ வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் தீவு பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு குலதெய்வ வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தீவு

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 சின்னஞ்சிறிய குட்டித்தீவுகள் உள்ளன. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவான இந்த பகுதியில் உள்ள தீவுகளில் தூத்துக்குடி குழுவில் 4 தீவுகளும், வேம்பார் குழுவில் 2 தீவுகளும், கீழக்கரை குழுவில் 7 தீவுகளும், மண்டபம் குழுவில் 7 தீவுகளும் அமைந்து உள்ளது.

அதில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அமைந்துள்ள நல்ல தண்ணீர் தீவு தூத்துக்குடி வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தீவு பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் குலதெய்வமான முனீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.

இந்த கோவிலில் அன்றைய காலந்தொட்டு ஏர்வாடி, கீழக்கரை, வாலிநோக்கம், முந்தல் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் அடிக்கடி படகில் சென்று தங்களின் குலதெய்வத்தை வணங்கி வருவது வழக்கமாக இருந்து வந்தது.

மனு

வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னரும் வழக்கம்போல் குலதெய்வத்தை கும்பிட சென்று வந்த நிலையில் சமீப காலமாக இந்த தீவுக்கு குலதெய்வ வழிபாட்டிற்கு மக்களை அனுமதிக்க வனத்துறையினர் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான மீனவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நல்ல தண்ணீர் தீவு பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு தற்போது வனத்துறையினர் வழிபாடு செய்ய அனுமதி மறுத்து வருகின்றனர்.

காலம்காலமாக வழிபட்டு வந்த தங்களின் குலதெய்வத்தை வனத்துறையினரின் இந்த புதிய கட்டுப்பாட்டால் பக்தர்கள் வழிபட முடியவில்லை. இலங்கைக்கு தாரைவார்த்த கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு நாமாக செல்ல அனுமதி இல்லையோ அதேபோல நல்ல தண்ணீர் தீவு நிலை தற்போது மாறிவிட்டது.

அனுமதி

இந்த தீவு முனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்றுத்தர வேண்டும். இதுதவிர, இந்த தீவுகளின் அருகில் படகினை பழுதுபார்க்கவும், வலைகளை உலர்த்தவும், கடல்பாசி, முத்து குளிக்கும், நண்டு பிடிக்கும் கடல் தொழிலாளர்கள் தங்கியிருக்கவும் அனுமதி பெற்றுத்தர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவ மக்களின் குலதெய்வம் அமைந்துள்ள நல்ல தண்ணீர் தீவுக்கு வழிபாடு செய்ய சென்றுவர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story