கணவரின் உடலை கொண்டுவரக்கோரி மனைவி மனு


கணவரின் உடலை கொண்டுவரக்கோரி மனைவி மனு
x

கணவரின் உடலை கொண்டுவரக்கோரி மனைவி மனு அளித்தார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள வடக்கு நரிப்பையூரை சேர்ந்தவர் வினோத்குமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி (வயத24). இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் வினோத்குமார். ஆகாஷ் என்ற ஆண் குழந்தை உள்ளான். எனது கணவர் கடந்த 8 ஆண்டுகளாக துபாய் நாட்டில் பணி செய்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல சாதாரணமாக பேசினார். இந்நிலையில் திடீரென்று அவருடன் பணி செய்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு எனது கணவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனது கணவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரின் இறப்பில் சந்தேகம் உள்ளது. அதனை முறையாக விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும், எனது குழந்தையும் எனது கணவரின் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் வாழ்ந்து வருகிறோம்.

தற்போது என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறோம். அவரின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து உள்ளோம். அவரின் இறப்பு குறித்து உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு அவரின் இறுதிச்சடங்கினை சொந்த ஊரில் செய்ய வசதியாக அவரின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Related Tags :
Next Story