தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு கொடுத்துள்ளனர்.
பனைக்குளம்,
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்துக்களை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து மாவட்ட பா.ஜ.க. தலைவர் கதிரவன் தலைமையில், மாவட்ட பொதுச்செய லாளர் ஆத்மா காந்தி மற்றும் பா.ஜனதா கட்சியினர் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:- நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மத தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நாடாளுமன்ற ஒதுக்கீட்டில் நீலகிரி தொகுதி யில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார். அவர் வகிக்கும் பதவிக்குரிய சத்திய பிரமாணத்தை புறக்கணித்து, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பையும் விமர்சித்து, கடந்த 7-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடந்த விழாவில் இந்து மக்களை ஆபாசமாக, தரக்குறைவாக பேசி இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு பொது மேடையில் இந்து மக்களை ஆபாசமாக பேசி இந்திய இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டது மட்டு மல்லாமல் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகத்திலும் இந்த செய்தியை பரப்பி விடும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஐகோர்ட்டு வக்கீல் சண்முகநாதன், வக்கீல் பிரிவு தலைவர் சிவசங்கர், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் பழனி குமார், ஊடகப்பிரிவு மோகன், ஆன்மிகப் பிரிவு மாநில செயலாளர் குருஜி, அரசு பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு சரண்யன், மாவட்ட துணை தலைவர் சங்கீதா, மாவட்ட செயலாளர் கலையரசி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் நரசிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.