நடமாடும் ரேஷன்கடை கேட்டு கிராம மக்கள் மனு


நடமாடும் ரேஷன்கடை கேட்டு கிராம மக்கள் மனு
x

நடமாடும் ரேஷன்கடை கேட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே உள்ள எட்டிவயல் ஊராட்சி தலைவர் கனகசக்தி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எட்டிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகுடி, இன்னிசேரி, அனுசியாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எட்டிவயல் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில்தான் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. மேற்கண்ட 3 கிராமத்தினரும் இந்த ரேஷன்கடைக்கு செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. ரேஷன்கார்டுதாரர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டி உள்ளதால் வயதானவர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பலர் பொருட்கள் வாங்க முடியாமல் போய்விடுகிறது. 3 கிராமங்களுக்கும் ஆனைகுடியை மையமாக வைத்து தனி ரேஷன்கடை அமைத்து தரவேண்டும். இல்லாவிட்டால் நடமாடும் ரேஷன்கடையாவது ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Related Tags :
Next Story