போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, துணைத்தலைவர் சுகனேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், தலைமையில் பா.ஜ.க.வினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து துணை போலீஸ் சூப்பிரண்டுவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கையை அடுத்த கீழ பூங்கொடியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் இந்துக்களையும், இந்துக்களின் வழிபாட்டு முறையையும் இழிவாக பேசியும், இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதையை மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ளார். இது வலைதளங்களில் வெளியாகி உள்ளது. எனவே இந்துக்களையும், இந்துக்களின் புனித தெய்வங்களையும் அவதூறாக பேசி ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்திய விக்னேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ள அவரது பேச்சுக்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.