பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்


பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
x

பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கிடக் கோரி திருவண்ணாமலை மாவட்ட தலித் விடுதலை இயக்கம் மகளிர் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது, வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகில் இருந்து கோரிக்கை மனுக்களுடன் புறப்பட்ட ஊர்வலத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் நதியா தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் கிச்சா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவி சின்னதாயி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கருப்பையா கலந்து கொண்டார்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பாக பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் மனு அளித்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story