வீட்டு வசதி வாரியம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை தீர்க்க ஓசூரில் கோரிக்கை பெட்டி-தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மனு அளிக்கலாம்


வீட்டு வசதி வாரியம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை தீர்க்க ஓசூரில் கோரிக்கை பெட்டி-தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மனு அளிக்கலாம்
x

வீட்டு வசதி வாரியம் தொடர்பான பொது மக்களின் குறைகளை தீர்க்க ஓசூரில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பெட்டியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.

தர்மபுரி

கோரிக்கை பெட்டி

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்- அமைச்சர் அறிவுரைப்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஓசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து கோரிக்கை மனுக்கள் ெபறப்படும்.

வருகிற 30-ந்தேதி வரை ஓசூரில் பாகலூர் சாலையில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட இருக்கிறது.

பயன்பெறலாம்

அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் வீட்டு வசதி வாரியம் தொடர்பான கோரிக்கைகள், குறைகள் குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம். இதன் மூலம் அரசிடமிருந்து உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே வீட்டு வசதி வாரியம் தொடர்பான மக்களின் குறைகளை தீர்க்க முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story