வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி மனு
வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் செந்துறை ஒன்றியம், நெய்வனம் பெரியார் நகரை சேர்ந்த இளங்கோவன் அளித்த மனுவில், பெரியார் நகரில் கான்கிரீட் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் முறையாக செல்வது இல்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீரால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை வடிகால் வசதி செய்து தரவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி, பெரியார் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story