இலவச விவசாய நிலப்பட்டா வழங்கக்கோரி மனு
இலவச விவசாய நிலப்பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்
நரிக்குறவர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பாபு தலைமையில் வேப்பந்தட்டை தாலுகா, எறையூரை சேர்ந்த நரிக்குறவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்களுக்கு அரசு கொடுத்த நிலத்திற்கு இலவச விவசாய நிலப்பட்டா வழங்க வேண்டும். நாங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க.வினர் தலைமையில் எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்களில் சிலர் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் மூலம் வீட்டுமனை வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story