விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி மனு


விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி மனு
x

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

கரூர்

நச்சலூர் வி.ஆர்.ஓ மற்றும் தாட்கோ காலனியை சேர்ந்த பொதுமக்கள் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவியிடம் நேற்று மனு ஒன்று அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நங்கவரம் தென்பாக்கம் மற்றும் நெய்தலூர் தெற்கு கிராமத்தில் உள்ள சில சர்வே எண்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்கள் 70 ஆண்டு காலமாக விவசாயம் செய்து முறையாக அரசு தீர்வை செலுத்தி வருகிறோம். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு அந்த நிலங்களில் அரசு மூலம் தைலக்கன்றுகள் நடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலங்களின் சுவாதீனத்தை தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு அறிவுறுத்துகின்றனர்.

தங்களது குடும்பத்திற்கு பட்டா நிலங்கள் இல்லாத நிலையில் தற்போது பயன்படுத்திவரும் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தோம். தங்களுக்கு வருமானத்திற்கு வேறு வழி இல்லாமல் அரசை நம்பி உள்ளோம். இந்த நிலங்களை ஒட்டி உள்ள வாரி மற்றும் சாலைகளை அகலப்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தொடர்ந்து அளிப்போம். எனவே இந்த நிலத்தில் சாகுபடி செய்யும் சாகுபடி தாரர்களுக்கு முறையாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story