பட்டா நிலத்தை அளவீடு செய்ய வலியுறுத்தி மனு


பட்டா நிலத்தை அளவீடு செய்ய வலியுறுத்தி மனு
x

ராஜபாளையம் அருகே பட்டா நிலத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர்


ராஜபாளையம் அருகே பட்டா நிலத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வீட்டு மனைப்பட்டா

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராஜபாளையம் தாலுகா மேல குன்னங்குடி மற்றும் முதுகுடி பகுதிகளில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் இடத்தை அளவீடு செய்து அவர்களுக்கு வழங்கப்படாத நிலை உள்ளதாகவும், உடனடியாக இடத்தை அளவீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

மண் குவாரி

விருதுநகர் சூலக்கரை தெற்கு தெருவை சேர்ந்த அழகர் என்பவர் தனது பகுதியில் கடந்த 5 வருடங்களாக மண் குவாரி செயல்பட்டு வருவதாகவும், இதனால் அந்த பகுதியில் உள்ள 250 குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் மண் குவாரியை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சசிகுமார் கொடுத்துள்ள மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அத்திகுளம் தெய்வேந்திரி பஞ்சாயத்திலும், பிள்ளையார் குளம் பஞ்சாயத்திலும் நீர்நிலைகளுக்கு சம்பந்தம் இல்லாத பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற வருவாய் துறை நடவடிக்கை எடுக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை தவிர்க்க உத்தரவிட வேண்டும்.

1 More update

Related Tags :
Next Story