வார்டுகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி கவுன்சிலர்கள் மனு


வார்டுகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி கவுன்சிலர்கள் மனு
x

குன்னூர் நகராட்சியில் 11 வார்டுகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி கவுன்சிலர்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் நகராட்சியில் 11 வார்டுகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி கவுன்சிலர்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

பணி மேற்கொள்ளவில்லை

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகர மன்றம் தேர்வு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகிறது. ஆனால், சில பகுதிகளில் மட்டும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து வருவதாக கவுன்சிலர்கள் புகார் கூறி வருகின்றனர். சில வார்டுகளில் பணி மேற்கொள்ளப்படாததால், பொதுமக்கள் கவுன்சிலர்களை கேள்வி கேட்டு வருகின்றனர்.

வார்டுகளுக்கு போதுமான நிதி நகராட்சி சார்பில் ஒதுக்கீடு செய்யாததால், குன்னூரில் மழை காலத்தில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. சாலைகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிதி ஒதுக்க வேண்டும்

இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு இடங்களில் கணக்கெடுக்கும் பணிகள் நடக்கிறது. இந்தநிலையில் குன்னூர் நகராட்சியில் 11 கவுன்சிலர்கள் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், 11 வார்டுகளில் சமுதாயக்கூடம், சாலை, குடிநீர் தொட்டி மற்றும் தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுகளில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story