மும்பாலை கிராமத்தில் 17-ந் தேதி மனுக்கள் பெறும் முகாம்


மும்பாலை கிராமத்தில் 17-ந் தேதி மனுக்கள் பெறும் முகாம்
x
தினத்தந்தி 4 Feb 2023 1:01 AM IST (Updated: 4 Feb 2023 3:15 PM IST)
t-max-icont-min-icon

மும்பாலை கிராமத்தில் 17-ந் தேதி மனுக்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை

மணமேல்குடி அருகே மும்பாலை வருவாய் கிராமத்தில் மார்ச் மாதம் 8-ந் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணியளவில் மும்பாலை கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முன்மனுக்கள் பெறப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story