காளைகளுக்கு ஆன்லைன் பதிவை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்-ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கலெக்டருக்கு மனு


காளைகளுக்கு ஆன்லைன் பதிவை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்-ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கலெக்டருக்கு மனு
x

காளைகளுக்கு ஆன்லைன் பதிவை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமுவிடம் நேற்று ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க ஆன்லைன் டோக்கன் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும். தமிழகத்தில் அரசு எடுத்து நடத்தக்கூடிய அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற ஜல்லிக்கட்டு விழாக்களில் தான் ஆன்லைன் டோக்கன் என்பது அரசின் விதிமுறைப்படி நடப்பதாகும். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்தந்த கிராம கமிட்டியாளர்கள் மூலமாக தாங்கள் விரும்பிய காளைகளுக்கும், விரும்பிய ஊரை சேர்ந்த காளைகளுக்கும், விருந்தோம்பல் முறையில் வெற்றிலை பாக்கு வைத்து பாரம்பரிய முறைப்படி டோக்கன்கள் வழங்கி அழைக்கக்கூடிய அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் ஆன்லைன் டோக்கன் நடைமுறை உத்தரவுகள் இல்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட வேண்டும். அடுத்தடுத்து நடக்கக்கூடிய ஜல்லிக்கட்டுகளில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யாவிட்டால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்கள், ஜல்லிக்கட்டு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து விரைவில் மாபெரும் போராட்டம் நடைபெறும் சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story