வடமாநில தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
வடமாநில தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மனு ஒன்று ெகாடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது, நாங்கள் திருப்பூர் வாலிபாளையம் எம்.ஜி.ஆர்.சிலை அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் 8 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். கூலி வேலைகளை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் எங்கள் செலவுகள் போக மீதி பணத்தை வைத்துதான் எங்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. தற்போது வேலைவாய்ப்பும் சரியாக இல்லை. இந்த நிலையில் கடந்த வாரம் அரசு அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இயந்திரங்களை கொண்டுவந்து கட்டிங்களை இடிக்கின்றோம், உடனடியாக வெளியேறுங்கள் என்று கூறுகின்றனர். அதைத்தொடர்ந்து 3 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளனர். இதனால் நாங்கள் என்ன செய்வதன்று தெரியாமல் உள்ளோம். எனவே நாங்கள் வேறு இடம் தேடிச்சென்று குடியேறுவதற்கு 2 மாதங்கள் அவகாசம் கொடுத்து மாவட்ட கலெக்டர் உதவமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.