நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுகோள்
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் பாசன பகுதி அரியலூர் மாவட்ட விவசாய சங்க பொறுப்பாளர் வேதநாயகம்:- டெல்டா பாசன பகுதிகளில் பெரும்பான்மையான விளை நிலங்கள் விளை நிலங்களாகவே உள்ளன. வீடுகளாக மாறவில்லை. விவசாய நிலங்களை மனை பிரிவுகளாக மாற்றிவிட்டால் எதிர்காலத்தில் விவசாயம் கேள்விக்குறியாகிவிடும். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படி நீர்நிலை புறம்போக்குகளில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி வருகிறது. அதற்கு முரணாக இப்போது கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம், விவசாய நிலங்களை எதிர்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் வசப்படுத்தி லாபம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக மாறிவிடும். பொதுவாகவே நிலம் எடுப்பு என்கிற செயல்களுக்கு மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் பெயரளவுக்குத்தான் நடத்தப்படுகின்றன. எனவே விவசாயத்தை காலப்போக்கில் சீரழிக்கும் இந்த சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.