மின்கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்


மின்கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்
x

மின்கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 200 யூனிட்டுக்கு மேல் 2 மாதங்களுக்கு மாதம் ரூ.27.50ம், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.72.50-ம், 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.147.50-ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் திருச்சியில் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். அதன்படி திருச்சி கிராப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் 500 மனுக்களை மின்வாரிய உதவிசெயற்பொறியாளரிடம் வழங்கினர்.


Related Tags :
Next Story