மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் ஊழியர்கள், கலெக்டரிடம் மனு


மக்களை தேடி மருத்துவ திட்ட  பெண் ஊழியர்கள், கலெக்டரிடம் மனு
x

மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் ஊழியர்கள், கலெக்டரிடம் மனு

திருநெல்வேலி

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் நேற்று சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

அதில், ''நெல்லை மாவட்டத்தில் சுகாதார திட்டப்பணிகள் மூலம் ஒருங்கிணைந்த மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அமல்படுத்தும் விதமாக 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஆரம்பத்தில் மாதம் ரூ.3500 வழங்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டம் அறிவித்ததற்கு பிறகு நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து மருந்துகளை வாங்குவதற்கு பதிலாக நாங்களே மருந்துகளை எடுத்து கொண்டு மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகிறோம். இதற்காக கூடுதலாக ரூ.1,000 உயர்த்தி, தற்போது ரூ.4,500 மாதம் வழங்குகின்றனர்.

நாங்கள் பணி செய்கிற இடங்களுக்கு செல்வதற்கோ, துறைவாரியான கூட்டங்களுக்கு செல்வதற்கோ எந்தவித பயணப்படிகளும் வழங்குவதில்லை. பொதுமக்களின் விவரங்களை சேகரித்து அரசுக்கு சமர்ப்பிப்பதற்கு பதிவேடுகளை பராமரிப்பதற்கும் பணம் வழங்குவதில்லை. எனவே குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்கும், பயணம் செய்வதற்கும், பதிவேடுகளை பராமரிப்பதற்கும் உரிய பணத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர்.


Next Story