மாற்று குடியிருப்பு வழங்கிய பின்னரே அப்புறப்படுத்த வேண்டும்


மாற்று குடியிருப்பு வழங்கிய பின்னரே அப்புறப்படுத்த வேண்டும்
x

மாற்று குடியிருப்பு வழங்கிய பின்னரே அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

சிவகங்கை

தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் ஆதி திராவிட நல அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

மானாமதுரை அண்ணா நகரில் தென்னக ெரயில்வேக்கு சொந்தமான இடத்தில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சுமார் 95 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வரியும் செலுத்தி வருகின்றனர். அத்துடன் அனைத்து குடும்பங்களுக்கும் அரசின் சார்பில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு அந்த இடங்களை காலி செய்யக்கோரி ெரயில்வே நிர்வாகம் மற்றும் அரசு நெருக்கடி கொடுத்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக தங்களுக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், அனைவருக்கும் அரசு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

மேலும் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை உத்தரவும் பெறப்பட்டது. ஆனால் இதுவரையிலும் அரசு இப்பகுதி மக்களுக்கு எந்த விதமான மாற்று குடியிருப்புகளும் செய்து கொடுக்காமல் உள்ளது. எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு ெரயில்வேக்கு சொந்தமான காலி இடத்தில் குடியிருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாற்று குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story