துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு


துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி அவர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். ஆகியவற்றை பிடித்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர். மாவட்ட செயலாளர் சண்முகராஜன் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர்.

1 More update

Next Story