டாஸ்மாக் கடை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு


டாஸ்மாக் கடை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 July 2023 5:30 AM IST (Updated: 21 July 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை அகற்றக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள எல்.எம்.டபூள்யு. பிரிவு முதல் வண்ணான் கோவில் வரை பிரதான வணிக பகுதியாக உள்ளது. இங்கு பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க இங்கு வருகின்றனர். இங்கு தனியார் மருத்துவமனைகள், புகழ்பெற்ற கோவில், உணவகங்கள், மருந்து கடைகள் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள மருத்துவமனை அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதேபோல் தனியார் பார் ஒன்றும் இயங்கி வருகிறது. இங்கு மது அருந்த வரும் நபர்கள் மது போதையில் பொதுமக்களிடம் அநாகரிகமாகவும், அருவெருக்கத்தக்க வகையிலும் நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் கடும் அவதி அடைகின்றனர். மதுபோதையில் தள்ளாடும் நபர்களால் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனேவ இந்த டாஸ்மாக் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story