கைக்குழந்தையுடன் மனு அளித்த ஆசிரியர்
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கைக்குழந்தையுடன் வந்து ஆசிரியர் ஒருவர் மனு கொடுத்தார்.
தேனி
தேனி அல்லிநகரம் காந்திநகரை சேர்ந்தவர் சூர்யா. இவர் தேனியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர், தனது 2 வயது குழந்தையுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "நானும், எனது மனைவி ரோகினியும் கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். 2021-ம் ஆண்டு எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 8-ந்தேதி எனது மனைவி தனது தாயாரை பார்த்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். எனது மனைவி என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவர் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story