அந்தியூர் பகுதியில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனையா?- வாகனங்கள் பழுதாவதாக புகார்


அந்தியூர் பகுதியில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனையா?- வாகனங்கள் பழுதாவதாக புகார்
x

அந்தியூர் பகுதியில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பதால் வாகனங்கள் பழுதாவதாக புகார் எழுந்துள்ளது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பகுதியில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பதால் வாகனங்கள் பழுதாவதாக புகார் எழுந்துள்ளது.

தண்ணீர் கலந்த பெட்ரோல்

அந்தியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாகவும், பெட்ரோலில் தண்ணீர் கலப்பதால்தான் இதுபோல் நடக்கிறது என்றும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:-

அந்தியூர் பகுதியில் செயல்பட்டு பங்குகளில்தான் நாங்கள் பெட்ரோல் போடுகிறோம். பெட்ரோல் போட்ட உடன் சிறிது தூரம் ஓடும் வாகனங்கள் அப்படியே நின்றுவிடுகின்றன. உடனே சம்பவ இடத்துக்கே மெக்கானிக்கை வரவழைத்து பாத்தால், வாகனங்களில் எந்த கோளாறும் இல்லை என்கிறார்கள். அதன்பின்னர் வண்டியில் உள்ள பெட்ரோலை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, வேறு பகுதியில் இருந்து பெட்ரோல் வாங்கி ஊற்றி ஓட்டினால் வாகனங்கள் வழக்கம்போல் ஓடுகின்றன.

நடவடிக்கை

பெட்ரோல் விற்கிற விலையில் கூலி வேலைக்கு செல்பவர்கள் பெட்ரோல் போடுவதே கடினம். அதில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது. மேலும் தொடர்ந்து கலப்பட பெட்ரோலை ஊற்றி வந்தால் வாகனத்தின் என்ஜினும் பழுதாகிவிடும்.

எனவே பெட்ரோலிய துறை அதிகாரிகள் பெட்ரோல் பங்குகளில் ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறு ஆய்வு செய்து பெட்ரோலில் தண்ணீர் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்கள்.

மேலும் தண்ணீர் கலந்த பெட்ரோலை கேனில் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள். அது தற்போது வைரலாகி வருகிறது.



Next Story