பெட்ரோல், டீசல் வினியோகஸ்தர்கள் போராட்டம்; கமிஷன் தொகையை உயர்த்த வலியுறுத்தல்


பெட்ரோல், டீசல் வினியோகஸ்தர்கள் போராட்டம்; கமிஷன் தொகையை உயர்த்த வலியுறுத்தல்
x

பெட்ரோல், டீசலுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி வினியோகஸ்தர்கள் நேற்று ஒரு நாள் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

பெட்ரோல், டீசலுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி வினியோகஸ்தர்கள் நேற்று ஒரு நாள் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மத்திய அரசு பெட்ரோல், விலையை குறைத்துள்ளதை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் டீலர்களுக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் தொகையை மட்டும் உயர்த்தவில்லை.

இதை கண்டித்து தமிழ்நாடு பெட்ரோலியம் வணிகர் சங்கங்களின் சம்மேளன அறிவிப்பை தொடர்ந்து நேற்று ஒரு நாள் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நெல்லை மாவட்ட பெட்ரோலிய வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் டெப்போக்களுக்கு திரண்டு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

கமிஷன் உயர்வு

2017-ம் ஆண்டை ஒப்பிடும்போது தற்போது பெட்ரோல், டீசல் விலை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எங்களது முதலீடுகளும் அதேபோல அளவு உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நாங்களும் அந்த உத்தரவை கடைப்பிடித்தோம். ஆனால் பெட்ரோல், டீசலுக்கான கமிஷனை உயர்த்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கலால் வரி குறைப்பால் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எங்களுக்கு அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள்தான் அதிக லாபம் சம்பாதித்துள்ளன. கலால் வரி உயர்த்தப்பட்டால் அல்லது குறைக்கப்பட்டால் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலால்வரி மாற்றத்தின் போது எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடைவதில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 1 நாள் பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.


Next Story