பா.ஜனதா பிரமுகர் வீட்டின் முன்பு கிடந்த பெட்ரோல் குண்டுகளால் பரபரப்பு

பா.ஜனதா பிரமுகர் வீட்டின் முன்பு கிடந்த பெட்ரோல் குண்டுகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே பா.ஜனதா பிரமுகர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே பா.ஜனதா பிரமுகர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜனதா பிரமுகர்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெகதாப் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 42). பா.ஜனதா கட்சி பிரமுகர். கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு இவருக்கு காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பு நேற்று மாலை பெட்ரோல் நிரப்பப்பட்டு திரியுடன் 4 பெட்ரோல் குண்டுகள் கிடப்பதாக காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

4 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்

அங்கு இவரது வீட்டு வாசல் அருகில் பெட்ரோல் நிரப்பிய 4 பாட்டில்களும், ஒரு பெட்ரோல் நிரப்பப்படாத மதுபாட்டிலும் கிடந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பா.ஜனதா பிரமுகரின் வீட்டின் அருகில் பெட்ரோல் குண்டுகளை போட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பா.ஜனதா பிரமுகரின் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டுகள் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story