கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் இருவரிடமும் வழங்கப்பட்டன.
கோவை:
கோவையில் பா.ஜ.க., அலுவலகம் இந்து முன்னணி , நிர்வாகிகள் வீடுகள் என 7 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.பெட்ரோல் குண்டு வீச்சு கடந்த மாதம் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுஎச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் கோவையில் பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த 22ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசியதாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் இருவரிடமும் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story