இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் ,சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது
கடலூர்,
கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூர் ,சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.