பெட்ரோல், டீசல் விலை- 195 வது நாளாக மாற்றம் இல்லை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்களே விலையை தினமும் நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, கடந்த 195- நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. கடந்த மே 22 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.24 ஆகவும் குறைக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 6 மாதங்களாக விலையில் மாற்றம் இன்றி ஒரே விலையில் நீடிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63- ஆகவும் டீசல் விலை ரூ. 92.24-க்கும் விற்பனையாகிறது.
Related Tags :
Next Story