பெட்ரோல் விலை, டீசல் விலை; 85-வது நாளாக மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 85-வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
சென்னை,
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல்,டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல்,டீசல் விலை தொடந்து உயர்ந்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ7 குறைக்கப்பட்டது.
இதனால் மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அன்றைய தினத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 102.63 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ. 94.24- ஆகவும் விற்பனையானது. அதன்பிறகு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து அதேவிலையில் நீடிக்கிறது. அந்த வகையில், தொடர்ந்து 84-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.