சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
x

பெட்ரோல், டீசல் விலையில் 93-வது நாளாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

சென்னை,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து, மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.

அதன்படி, பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 காசுகளாக குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனையானது.

அதன்பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி அதே விலையில், கடந்த 3 மாதத்திற்கும் மேலாக விற்பனை செய்யப்படுகின்றது. அந்த வகையில் கடந்த 93-நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story