மருந்தாளுநர்கள் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் மருந்தாளுநர்கள் போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
தமிழகத்தில் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 46 துணை இயக்குனர் அலுவலக மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினார்கள். நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் அனந்தகுமார், செயலாளர் பாஸ்கரன் மற்றும் மருந்து கிடங்கு அலுவலர்கள், தலைமை மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனர். இந்த போராட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
Related Tags :
Next Story