2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த மருந்தாளுனர்கள்


2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த மருந்தாளுனர்கள்
x

2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து மருந்தாளுனர்கள் பணிபுரிந்தனர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தை சேர்ந்த மருந்தாளுனர்கள் நேற்று 2-வது நாளாக அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். மக்கள் நலன் கருதி 1,300-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை எம்.ஆர்.பி. வழியாக உடனடியாக நிரப்பிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவ விதி தொகுப்பின்படி கூடுதலாக மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை அட்டையுடன் பணிபுரிந்த மருந்தாளுனர்கள் தெரிவித்தனர்.


Next Story