மகளிர் உரிமை தொகை திட்ட த்தின் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது


மகளிர் உரிமை தொகை திட்ட த்தின் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது
x

மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட த்தின் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது.

கரூர்

2-ம் கட்ட முகாம்

கரூர் காளியப்பனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 390 இடங்களில் முகாம்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் 193 இடங்களில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 583 முகாம்களில் விண்ணப்ப பதிவு நடக்கிறது.

பயோ மெட்ரிக் முறையில்...

ஒவ்வொரு முகாமிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், பயோ மெட்ரிக் முறையில் விண்ணப்ப படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமமுமின்றி, காத்திருக்க செய்யாமல் மிக விரைவாக அந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story