போலீஸ் பணிக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு


போலீஸ் பணிக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு
x
தினத்தந்தி 10 Feb 2023 1:00 AM IST (Updated: 10 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலத்தில் நடைபெற்ற போலீஸ் பணிக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வில் 344 பேர் பங்கேற்றனர்.

2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்கள் பணிக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வு கடந்த 6-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 955 பேர் பங்கேற்றனர். அவர்களில் 672 பேர் முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் தேச்சி பெற்று அடுத்த கட்ட தேர்வுக்கு முன்னேறினர்.

இந்தநிலையில் நேற்று 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வுக்காக 350 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 6 பேர் மட்டுமே வரவில்லை. மற்ற 344 பேரும் பங்கேற்றனர். அவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம் அல்லது நீளம் தாண்டுதல், 400 மீட்டர் அல்லது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது.

ஆர்வமுடன் பங்கேற்பு

வாலிபர்கள் பலர் கயிற்றில் வேகமாக ஏறி அசத்தினர். இந்த தேர்வு மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டை தவிர்க்கும் வகையில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 2-ம் நிலை காவலர்களுக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வுக்காக 322 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story