தேவர்முக்குளம் கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


தேவர்முக்குளம் கிராமத்தில்  தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x

தேவர்முக்குளம் கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவர்முக்குளம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. இதில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்டவைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் பிற துறை அமைச்சர்கள் மாவட்டத்தில் பங்கேற்ற நிகழ்ச்சிகள், கலெக்டர் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் போன்ற புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story