நிலக்கோட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


நிலக்கோட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x

நிலக்கோட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

இதில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு நிதிஉதவி திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.

மேலும் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய புகைப்படங்கள், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. இதனை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.



Next Story